அன்புடையீர் வணக்கம்!
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 30வது (2025) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2025 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக கீழ்காணும் எழுத்தாளர்களையும், கலைஞரையும் விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது.
1. சுரேஷ்குமார இந்திரஜித் – புனைவிலக்கியம்
2. தியடோர் சு. பாஸ்கரன் – புனைவிலி இலக்கியம்
3. வெளி ரங்கராஜன் – கலை
ஒவ்வொன்றும் ரூ 1,50,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விருதாளர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய நடுவர் குழுவின் குறிப்புகளும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியை தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
‘விளக்கு’ செயற்குழு
நவம்பர் 2, 2026
- அம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.
- தீபாவளியில் இன்று
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்
- 80களில் “தீபாவளி”எப்படி தான் இருந்தது….
- விடை பெற்று விட்டாயா, நண்பனே?
- பச்சாதாபம்
- உம்மாச்சி
- கணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதை
- புருஷலட்சணம்.
- விளையும் பயிர் முளையிலே
- எண்ணம் மாறுபட என்ன காரணம்?
- வெற்றிடம்