This entry is part 1 of 14 in the series 8 நவம்பர் 2026

தீபாவளிக்குத் தொட்ட எண்ணையில் அம்மா பிசுபிசுத்தார்.
வழிந்த எண்ணையின் கூச்சத்தில் அம்மாவின் கை நீவி விட்டது.
புலி மார்க் சீயக்காயை கலக்கித் தேய்த்த சூட்டில் அம்மா இதம் கூட்டினார்.
கொதிக்கக் கொதிக்க ஊற்றிய வெண்ணீரில் துடித்துக் கத்திய பொழுது அம்மாவின்
திட்டல் அச்சரத் சுத்தகமாக அப்படியே ஒலித்தது.
இருக்காதாப் பின்னே நாற்பத்தி ஐந்து வயதுவரை
தீபாவளிக்குக் குளிக்க வைத்த அம்மா இறந்து விட்டதாக மனைவிதான் சொல்கிறார்
ஒவ்வொரு முறையும் குளிக்க வைக்கும் பொழுதும்.


-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationதீபாவளியில்  இன்று