This entry is part 12 of 14 in the series 8 நவம்பர் 2026

அழகான

கைத்தடி ஒன்றை வாங்கித்தந்தான் 

பெரியவன். 

குட்டிபெட்டி நிறைய சாக்லெட் 

கொண்டு வந்தான் இளையவன். 

காலுக்கு 

சிங்கப்பூர்செருப்பும் 

வெள்ளி வெற்றிலைப்பெட்டியும் 

தந்தார் மருமகன். 

விலை உயர்ந்த 

சால்வை 

குளிருக்கு போற்றினார் 

அடுத்த வீட்டு நண்பர். 

கூடத்தில் 

கொஞ்ச நேரம்தான்

விளையாடினர் 

பேரப் பிள்ளைகள் 

ஆங்கில ரைம்ஸோடு. 

முதியவர் பிள்ளைகள் 

 விளையாடிய மரக்குதிரை, 

வீட்டோரத்தில் 

புழுதியில் கிடந்தது. 

சுமங்கலியாக 

போய்விட்ட 

தருமபத்தினி

போட்டோவில் தொங்கினாள் 

தலைக்கு மேல். 

எல்லாம் இருப்பர் 

கொஞ்ச நேரம். 

எதுவும் இல்லாமல் 

வெற்றிடம் நிஜமென 

பெரியவருக்கும் தெரியும். 

எல்லாம் 

கொஞ்ச நேர 

வேஷமென!

தஞ்சாவூர் மண்ணில் 

சிந்திய வியர்வை 

அமெரிக்காவையும், கனடாவையும் 

அழைத்து வந்து

அந்திம காலத்தின் 

கண்ணாடியாக 

வீடெங்கும் நெளிந்தது. 

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஆடிய பாதங்களும் 

ஓடிய நேரங்களும்

வேடிக்கைத்தான் வாழ்க்கை!

இரா.ஜெயானந்தன். 

Series Navigationஎண்ணம் மாறுபட என்ன காரணம்?கடைசி மணியும் முதல் வரியும்