அறியாமை அறியப்படும் வரை….

ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன்  அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த  மனிதன் யார்? ஆண்டவன் தவம்  இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார்.…

இந்த மரம் போதுமா?

இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக  ஒளிந்து கொண்டு தானே  அம்பு எய்தி  தர்மம் நிலை நாட்டுவாய். குறி பார்க்க உனக்கு கூச்சம். தர்மத்தையும் தர்மமாகத்தானே  "ஸ்தாபனம்"செய்ய வேண்டும்  என்று  இவர்கள் சுலோகங்களை  குவித்து வைத்திருக்கிறார்களே ! உன்…

கொரோனா

கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன்  உனக்கு கொடுத்த தொற்றால் நீ  கொரோனா எனும்  அந்த…

சொல் உரித்து …….

சொல் உரித்து  பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை  பற்றிய உட்கிடக்கையை  உட்புகுந்து அறிந்து கொள்ள  நினைத்தேன். கடவுள் என்ற  சொல் தடுக்கி விழுந்தவன்  எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய்  ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின்  அசுர அலைகள் அலைக்கழிக்க  நான் சக்கையாகிப்போனேன்.…

சங்கிலி

அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌ வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை வளைத்து நக்கிக்கொண்டிருந்தன. அன்று அந்த விநாடிப்பிஞ்சில் கண்ணின் பார்வையில் அவள்ஒரு அரை சதவீதத்தைக்கூட‌ என் மீது வீசவில்லையே. அந்த…

ஓவியா

  கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் "பாம்பும் தடுக்கப்பட்ட பழமும் உள்ள ஈடன் காடு". இந்த உள்ளவியலின்…

“மும்பை கரிகாலன்”

======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி!…

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன். அநியாயங்களை நியாயம் என்று விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌ சமுதாய"ஷலக்கின்"கையில் எப்போதும் ஒரு தராசும் கத்தியும் ஆடிக்கொண்டிருக்கிறது!…

தொடு நல் வாடை

  ===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த…

யானை

ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட…