மகிழ்ச்சியைத் தேடி…

This entry is part 4 of 45 in the series 9 அக்டோபர் 2011

ரிஷி ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று என் கண் முன். அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும் பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன். அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன். அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம் வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை. விரையும் வேகத்தில் ‘ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக, பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில் நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில் இன்றும் […]

உறவுகள்

This entry is part 2 of 45 in the series 9 அக்டோபர் 2011

_கோபால்தாசன் எனக்கான வீடு இது. என் சிந்தனையின் பட்டறை என்றுகூடச் சொல்லலாம். தோற்றம் பழைய கட்ட்டிடமாக இருந்தாலும் உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும் என்னுள்ளிருக்கும் உறுப்புகளாய்… மிளகாய் விதை இட்டு முளைத்த செடிகளும் உண்டு. திருட்டுத்தனமாய் பிடுங்கி வந்து நட்ட பூச்செடியும் உண்டு. அப்பா அம்மா இருந்தும் இல்லாத அந்தப் பருவம் அவிழ்த்து விட்ட கன்று போன்றது. பக்கத்து வீட்டிற்கும் என் வீட்டிற்கும் மதிற்சுவர் பொது என்பதால் அடிக்கடி அம்மாவும் பக்கத்துவீட்டு அக்காவும் தலையை நீட்டிப் பேசிக்கொண்டிருக்கும் பேச்சில் […]

மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

This entry is part 35 of 45 in the series 2 அக்டோபர் 2011

காத்திருப்பு குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது .. நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது … ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள் உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய் நகர்கிறது ஐந்தாண்டு… காட்டப்படும் சொத்துக் கணக்குகள் யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய் உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் […]

வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

This entry is part 34 of 45 in the series 2 அக்டோபர் 2011

பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் – காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள் தோறும் கற்களைப் பார்த்தேன், மனித இதயங்களின் மறு வடிவம் யாம் என்றன.. கண்ணாடி தேசத்திற்குள் நுழைந்தேன், என் நிழலைத் தவிர மற்றெல்லா நிழல்களும் ஒளிந்து கொண்டன…. உண்மை கொண்டு உலகைநோக்கினேன், பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் பூஜ்ஜியமாகின.. பார்வை தாண்டி நோக்கும் போது பௌதிகஅதீதம் […]

“அவர் தங்கமானவர்”

This entry is part 33 of 45 in the series 2 அக்டோபர் 2011

நாய்க் கொரு நண்பகலில் வாய்த் ததொரு தெங்கம்பழம் தா னுண்ணத் தெரியாமலும் தரணிக் குத் தராமலும் உருட்டியும் புரட்டியும் ஊர்சுற்றி ஊர்சுற்றி ஓய்ந்து போனதந்த நாய் தமக்கும் வாய்த்தது தங்கமானவர் எனும் பட்டம் தரங் கெட்ட தலைக்குப் பின் தெளிவான ஒளிவட்டம் சோளக் காட்டு பொம்மைக்கு சேலையில் பரிவட்டம் சோற்றுக்கு வழி யில்லை மாற்றுக்குத் துணியில்லை இற்றுப்போன கூரை வேய கீற்றுக்கும் காசில்லை தகரத்தின் தரம்கூட தமக்கில்லை என உணர்ந்து தங்கமானவர் எனும் பட்டம் துறக்கவும் முடியவில்லை […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)

This entry is part 31 of 45 in the series 2 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த மானிடம் விருந்தோம்பும் ! ஒவ்வோர் காலை உதயமும் ஒரு புது வருகைதான் ! உவப்பு, மன இழப்பு, தாழ்ச்சி விழிப்பு யாவும் வரும் எதிர்பாரா விருந்தாளிகள் போல் ! எல்லா ரையும் வரவேற்று உபசரிப்பாய் ! கூட்ட மாய் துயரங்கள் வந்துன் வீட்டைத் தகர்க்கினும், ஆசனங்களைக் காலி செய்யினும் மதிப்புடன் நடத்து அனைத்து விருந்தி னரையும் ! வீட்டுக்கு வரும் விருந்தினர் […]

வீடழகு

This entry is part 29 of 45 in the series 2 அக்டோபர் 2011

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் ஜொலிக்கும் பித்தளையின் தகதகப்போடு. மழைத் தூரிகை பூசணம் சூரியக்குடைத் தடுப்புதாண்டி வரவிட்டதில்லை ஒரு தேன்சிட்டோ., குருவியோ. காலைப் பனியும் மதிய வெய்யிலும் மாலை வாடையும் நுழைந்து அள்ளி அள்ளித் தெளித்துக் கொண்டேயிருந்தது அழகை. ஆசையோடு மொண்டு மொந்தையிலிட்டுக் குடித்துக் கொண்டிருந்தேன் வீடழகை. நீர்குடித்த ஈரத்தால் கசிந்து முறிகிறது முதலில் ஒற்றைச் சிலாகை வெட்டு வாதமாய். […]

பூனைகள்

This entry is part 27 of 45 in the series 2 அக்டோபர் 2011

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை செய்ததாய் நெட்டி முறிக்கின்றன. வீட்டுக்காரி அள்ளி வைக்கும் மீனில் திருப்தியடையும் அவை வளர்ப்புப் பிராணிகள்தாம் காவல் காப்பவை அல்ல. மடியில் அமர வாய்ப்புக் கிடைக்கும்போது மடியிலும் சிலசமயம் படியிலும் ஜீவிதம் செய்கின்றன. வனத்தின் மீட்சியாய் பூச்சிகளைத் துரத்துவதும் வேட்டையாடுவதாய்த் திரிவதும் வம்சத்தின் மிச்சங்கள் எல்லற்றையும் கூர்ந்திருப்பதாய் காது விடைக்க கண் விரிய கம்பீரமாய் அவை […]

சிற்பம்

This entry is part 26 of 45 in the series 2 அக்டோபர் 2011

  ‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!   பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!   ‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும் ‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும் பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!   இவை மட்டுமல்ல அழகாய் உன் தனித்துவத்தோடு செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

சுதேசிகள்

This entry is part 25 of 45 in the series 2 அக்டோபர் 2011

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை ‘ஆதலால் காதலை’ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.   வெள்ளாவியில் வைத்துத் துவைத்ததால் போகாத அழுக்குடன் எல்லோரும் வாழ்நாள் முழுதும் மல்லுக்கட்ட இயலாமல் ஒரு தேக்கரண்டி பொடி தேடி அலைகின்றனர்   வெள்ளை உள்ளம் படைத்தவரை இனங்கண்டுகொள்ள அவரின் முகமும் செயற்கை வெள்ளையாய் […]