அதையும் தாண்டிப் புனிதமானது…

This entry is part 37 of 45 in the series 26 பிப்ரவரி 2012

மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக… வயதாக… வயதாக தூக்கம் தொலைந்து வர அடம் பிடிக்கிறதே..இதே…எனக்குப் பெரிய கவலை…நினைத்தபடியே.. மெல்ல கடிகாரத்தை உற்றுப் பார்க்கிறாள் . இரவு விளக்கின் ஒளியில், மணி இரண்டைத் தாண்டி விட்டதை அறிந்து…அட ராமா..இன்னுமா தூக்கம் வரலைன்னு…அலுத்துக் கொண்டாள். “மெத்தைய வாங்கலாம்…தூக்கத்தை […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15

This entry is part 32 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கறுப்பு நிறத்தில் நீண்ட கழுத்தை மூடிய அங்கியும், இடுப்பில் இறுகச் சுற்றி பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த கயிறும் தலையில் கிரீடம்போல ஒரு தலைப்பாகையும் அணிந்து நன்கு சிவந்த தோலுடன் எதிர்பட்ட ஆசாமியைப் பார்க்க வியப்பாக இருந்தது. தோல்வியாதி பிடித்த மனிதன்போலிருந்தான். கையை உயர்த்தி ஆசீர்வதித்தான், அதை ஏதோ கெட்ட சகுனம்போல உணர்ந்தார். 16. நேற்று அணில் கடித்த மாம்பழத்தை எவருடன் பங்கிட்டுக்கொண்டாயென்று கேளுங்கள், மூன்று நாட்களுக்கு முன்பு பல்லாங்குழி ஆட்டத்தின் முடிவில் வீட்டிற்குக்கொண்டுவந்த சோழிகள் எத்தனையென்று கேளுங்கள் அல்லது […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12

This entry is part 29 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம்         (மூன்றாம் அங்கம்)                 அங்கம் -3 பாகம் – 12 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா என் பெற்றோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.  ஆனால் அவர்கள் அந்தச் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனத்தார்.  அவரது திருமணம் ஆஸ்திரேலியாவில் மட்டும் அங்கீகாரம் பெற்றது.  ஆனால் இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை !  என் தாய் என் தந்தையின் இறந்த மனைவிக்குத் தங்கை […]

முன்னணியின் பின்னணிகள் – 29

This entry is part 16 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> நாங்கள் பிளாக்ஸ்டேபிளை அடைகிறோம். ராய்க்காக ஒரு கார், ரொம்ப அலங்காரமாயும் இல்லை, எளிமையாயும் இல்லை, காத்திருந்தது. சாரதியிடம் எனக்காய் ஒரு குறிப்பு… மறுநாள் திருமதி திரிஃபீல்டுடன் மதிய உணவுக்கு வாருங்களேன் நீங்கள். நான் ஒரு வாடகைக்கார் பிடித்து பியர் அன்ட் கீ ஓட்டலை அடைந்தேன். ராய் சொன்னார். இப்ப முன்பக்கமாகவே புது மரைன் ஓட்டல் ஒன்று வந்திருக்கிறது. வசதிகள் அதிகமான பெரிய விடுதி அது, என்றாலும் எனது பால்யகாலத்தில் […]

பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்

This entry is part 15 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ ஒரு காட்டுக்குப் பறந்து போயிற்று. அங்ளே ஒரு புலி கொன்று போட்டிருந்த காட்டெருமையைக் கண்டது. வயிறு நிறைய அதைத் தின்ற பிறகு, செம்பரத்தைப்பூபோல செக்கச் செவேலென்றிருக்கும் மாமிசத் துண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிந்து, ‘’ஹிரண்யனே; […]

பட்டறிவு – 2

This entry is part 14 of 45 in the series 26 பிப்ரவரி 2012

அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து […]

மானம்

This entry is part 9 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான் […]

புலம்பெயர்வு

This entry is part 7 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கணேஷ் வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள். பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் […]

முன்னணியின் பின்னணிகள் – 27

This entry is part 28 of 31 in the series 19 பிப்ரவரி 2012

    சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது. ”இப்ப அந்த கெம்ப் ரோசியோட ஓடிப் போயிட்டார்னால், அவர் தன் மனைவியை விட்டுப் பிரிஞ்சிருக்கணும், இல்லியா?” ”இருக்கலாம்” என்றேன் நான். ”யப்பா, நீ ஒரு உபகாரம் பண்ணேன்?” ”சொல்லுங்க, முடிஞ்சா செய்யிறேன்.” ”நீ பிளாக்ஸ்டேபிள் வரை ஒரு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11

This entry is part 26 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தொழிற்சாலை பரம்பரைச் சொத்தாய் இருக்கலாம்.  ஆனால் அங்குள்ள மேஜை நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜை விரிப்புகள், தோரணத் துகில், பூங்கா, பூத்தோட்டம், உணவகம் எல்லாம் எங்களுக்குச் சேர்ந்தவை !  மெய்யாகச் சொன்னால் எனக்குச் சேர்ந்தவை.  நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் அவற்றை ! பெர்னாட் ஷா (மேடம் பிரிட்னி)   மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]