This entry is part 2 of 10 in the series 23 ஆகஸ்ட் 2026

                          -தர்ஷினி

யார் யாரோ

என்னை

உடைத்துவிட்டார்கள்!

அதில் நான்

கண்ணாடிச் சில்லாய்

நொறுங்கிவிட்டேன்!

ஆனாலும் என்னை

பார்த்து ஏங்குகிற

ஒருசிலர் என்னை

தடவிக் கொண்டே

செல்கிறார்கள்!

அது

என்மீதுள்ள இரக்கமா?

அல்லது…

உயிரோடு நடமாடும்

முகமூடிகளின்

நாடகமா…?

                – தர்ஷினி

Series Navigationதமிழ்த் தாய் வாழ்த்துநன்றி நவிலல்