வசந்தி முனீஸ்

கொளுத்தும் வெயில்
காட்டுக்குள் ஓடி ஒளிகிறது
ஒத்தையடிப் பாதை!
*
திருவிழா—
சிறுவன் கையில்
ஜவ்வுமிட்டாய்க் கடிகாரம்!
*
ஓடைத் தண்ணீர்—
தொட்டுப் பார்க்கிறது
நாணல்!
*
ஐஸ்பாய் விளையாட்டு—
ஒளிந்தவனைக் காட்டிக் கொடுத்தது
செம்மறிக்குட்டி!
*
உச்சிக் கொப்பில் புளியம்பழம்—
நாக்கின் அடியில்
எச்சில் குளம்!
*
செவிட்டுக் கிழவி—
கத்திக் கூப்பிடுகிறது
செவலை மாடு!
*
தெருவில் மீன்காரர்—
திண்ணையில்
பூனைக்காரர்கள்!
*
munees4185@gmail.com