This entry is part 4 of 9 in the series 27 செப்டம்பர் 2026

பூமியும் மழையும் காதல் காட்சி கண்டது

பூமி மீது பெரும்காதல் கொண்ட மழைக்காதலன்
பகலெல்லாம் இடியால் செருமினான்
உணர்வார் யாருமில்லை
பிறகு
மின்னலால் கையெழுத்து இட்டும் விளக்கினான்
புரிவார் சிலரே என அறிந்து
இரவெனும் தாதியிடம் சேதி சொல்ல
அவள் கொண்டு சென்று கூட்டி வைத்தாள் காதலரை.
முதியோர் அதனைக் குளிர் என்றனர்
இளையோர் புயல் என்றனர்
வானிலை அறிக்கை கஜா என விளித்தது
பூமியும் மழையும் எதுவும் பொருட்டில்லை என
ஆனந்தக்கூடல் கொண்டுள்ளனர்
மனித இனக்கண்கள் காண்பதெல்லாம்
குள்ளக்குளிர இயற்கையின் படுக்கை அறையே .

***

Series Navigationகடற்பயணத்தில் என் சின்ன படகுமினுக்கும் மின்மினிகள்