This entry is part 9 of 9 in the series 27 செப்டம்பர் 2026

வசந்தி முனீஸ்

கொளுத்தும் வெயில்

காட்டுக்குள் ஓடி ஒளிகிறது

ஒத்தையடிப் பாதை!

*

திருவிழா—

சிறுவன் கையில்

ஜவ்வுமிட்டாய்க் கடிகாரம்!

*

​

ஓடைத் தண்ணீர்—

தொட்டுப் பார்க்கிறது

நாணல்!

*

​ஐஸ்பாய் விளையாட்டு—

ஒளிந்தவனைக் காட்டிக் கொடுத்தது

செம்மறிக்குட்டி!

*

​உச்சிக் கொப்பில் புளியம்பழம்—

நாக்கின் அடியில்

எச்சில் குளம்!

*

​செவிட்டுக் கிழவி—

கத்திக் கூப்பிடுகிறது

செவலை மாடு!

*

​தெருவில் மீன்காரர்—

திண்ணையில்

பூனைக்காரர்கள்!

*

munees4185@gmail.com

Series Navigationநகர்ப்புற இரவு