This entry is part 8 of 9 in the series 30 ஆகஸ்ட் 2026

வசந்ததீபன் 

சுவர்களால் ஆனதல்ல வீடு

இதயங்களலானது

அன்பின் மெல்லிய இழைகளானது

துண்டு மேகமே இரக்கமற்று எம்மைக் கடக்காதே

கொஞ்சம் உன் கருணையைச் சிந்தி விட்டுப் போ

கருகிக்கிடக்கும் நாங்கள் தளிர்க்க தயவு காட்டு

இச்சிமரம் காற்றில் யட்சியாய் ஆடுகிறது

பிச்சிப்பூக்களின் மணம் நெஞ்சைப் பிடித்தாட்டுகிறது

நஞ்சைத் தின்றவனாய் நானும் கண்கள் சொருகக் கிடக்கிறேன்

கண்ணீர் மழையில் நனைந்தேன்

கவிதைத் தெருவில் அலைந்தேன்

காலமெல்லாம் தடுமாறி  

வேதனையில் விழுகுகிறேன்

தண்டவாளங்களின் மேல் ரயில் ஓடுகிறது

காலத்தின் மீது வாழ்க்கை விரைகிறது வெற்றிடத்தின் மேல் சவாரி செய்தபடி நான் போகிறேன்.

வசந்ததீபன் 

Series Navigationஅரா கவிதைகள்திடீர் சிந்தனைகள்!