காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் வேண்டாத இலைகளைக்களைவதும் அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும், அண்டி வரும் எவருக்கும், யாரெனத்தெரியாமல்…
எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் நான் இயந்திரமாகிவிடுகிறேன் எது நல்லநேரம் என்று குழப்பமாய் உள்ளது கடவுளாய் இருப்பதைவிட…
நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே…
விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்
பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால்…
____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் - கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை…
அதைப் போலொரு பறவையைப் பலியிட்டு படையலுடன் பிரார்த்தனனகளுடன் அண்ணாந்து வானம் நோக்கி அழைத்த படியிருந்தான். குறித்த நேரத்தில் அவ்விடத்தைத்தினம் வந்தடைகிற அது அன்று வரவே இல்லை. ஆளற்ற வானந்தரத்தில் நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த அவனை போலொரு அழுகிய…
தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது .…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆலோசனை எதுவும் உதவாது காதலர் தமக்கு ! மலை நெடுவே ஓடும் நீரோட்டம் போலில்லை அவருக்குக் குறுக்கிடும் அணையின் திறம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஏழ்மையில் உழலும் என் தோழனே ! செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது.…
தோற்ற மயக்கம் தொற்றாகி மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்த கல்லூரிக் காலங்களில் அவளை வருணிக்க வாய்த்திருந்த நிலா காய்ந்திருக்கும் நிலா நுகர்ந்த முல்லையெனவும் என் நெஞ்சுக்குள் அடைபட்ட காலங்களே அகிலத்தாருக்கு அமாவாசை யெனவும் ஒளிந்தும்…
இடறல்:- *********************** ஹாய் செல்லம் மிஸ்யூடா அச்சுறுத்துகிறது., குறுங்கத்திகளாய் கண்களைக் குத்துமுன் மடக்கிக் குப்பையில் போடும்வரை. யாரும் படித்திருக்கக் கூடாதென எண்ணும்போது அப்ப உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி கத்தி முனையாய் இடறிக் கொண்டே.…
நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது.…
மற்றுமொரு இரவு உறக்கத்தை வரவழைக்க முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டியுள்ளது மது புட்டிகளின் சியர்ஸ் சத்தங்களைத் தவிர இரவு அமைதியாக இருந்தது அன்று பகலில் சந்தித்தவர்களில் சில நபர்களின் முகங்களே ஞாபகத்தில் இருந்தது படுக்கையை பகிர்ந்து…
வலியில்லாமல் தொ¢த்த தசைகள். நிண ஆற்றை உருவாக்கிய தேகம். வீச்சம் நாறிய மூளை. விஸ்வரூபம் எடுத்த உன்னால் இனியும் வாழக் கற்கிறேன். நடு ரோட்டில் கால் நைந்து போன தவளையைப் பார்த்து. Chandrasekaran S.s.n.
நள்ளிரவுக் கருமை; மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி பாய்ச்சும் நிலவு; 'கெக்க'லித்துச் சிரிக்கும் சுடரு. விரிவான் விரிவெளி. 'புதிர் நிறை காலவெளி. வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு. பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமை. பன்முறையெனினும் மீறி…
வெறுக்கப்பட்ட அத்தியாயங்களின் வழியே ஊடுருவும் ஒரு வெறுப்பு இன்றைய பொழுதினை நிலைகொள்ளாமல் செய்யும் வலிமை கொண்டது. மேலெழும் உவர்ப்பின் சுவையை ருசிபார்க்க ஆவல் கொள்கிறது கண்கள்,காரணம் அறிந்த மனமும் அதி தீவிரமாய் எதையெதையோ, மற்றவர்கள்…
அதிகாலையிலேயே மழை ஆரம்பித்துவிட்டது காலையில் செய்வதற்கு ஒன்றுமில்லை சாப்பிடுவதைத் தவிர விடுவிடுவென ஓடிப்போய் கதவைத் திறந்தேன் நினைத்தது போல் நடந்துவிட்டது நாளிதழ் மழைநீரில் தொப்பலாக நனைந்துவிட்டது புத்தக அலமாரியைத் திறந்தால் சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய்…
தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக கைதட்டத் துவங்கியதிலிருந்து ஊழலுக்கெதிராக போராடுபவர்களை நிராகரிக்கவும் குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை தவிர்த்துவிடபோராடவும் தானே கற்றுக் கொள்ளுகிறது பின்னவீனத்துவ சமூகக் குழந்தை இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம் மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி குற்றங்களுக்காதரவாக…
எதுவும் தொலைந்திருக்கவில்லை. எனது நாட்கள் பத்திரமாகவே இருக்கின்றன. காலை மாலை இரவு எனச் சூ¡¢யன் சொல்லி வைத்தபடி நகரும் நேரங்களில் எனக்குக் கெட்டுப்போனது எதுவுமில்லை என்றாலும் செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் சாயமிழந்த வார்தைகளில் என்னதான் தேடிக்கொண்டிருப்பது?…
முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு…
. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி தரிசனத்தை இருப்புக்கும் இன்மைக்குமான பெருவழியில் சுவடுகளாகிறது திரும்புதலின் பாதையும் காத்திருந்து எரியும்…
கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள் அடுத்து இடம் பிடித்தன இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம் தேவைப்படுபவை…