தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

உண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்

டி ஜே எஸ் ஜார்ஜ் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) கடந்த வாரம் காங்கிரஸ் முகாம் பீதியில் இருந்தது. திகிலடைந்த காங்கிரஸ் தலைவர்கள் சிறகுகள் பிடுங்கப்பட்டு நிர்வாணமான கோழிகள் போல அங்கும் இங்குமாக பதறியடித்துகொண்டிருந்தார்கள். முன்னாள் அமைச்சர்…

கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…

'தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் கவனித்துக் கொள்ளவென கட்டுநாயக்கவுக்கு வந்து அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். எனது…

(78) – நினைவுகளின் சுவட்டில்

பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல…

கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?

      (கட்டுரை – 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும்…

கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில்…

பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….

கோவிந்த் கோச்சா ஒவ்வொரு தெருவும் சுத்தமாக அழகாக இருக்கனும் என்று வீடுகளின் மதில் ஓரம் சென்னையில் சிறு சிறு செடிகள் வைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் எக்ஸ்னோரா முயற்சி… ஆனால் அது இப்போது கண்டுள்ள…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 13

நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும்…

அறிவியல் தொழில்நுட்பம்

நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்

இன்றைய ஹாட் நியூஸ்: தமிழகத்தில் இடைத் தேர்தல்; டெல்லியில் சிதம்பரம்; உலகத்தில், நியுட்ரினோ (Neutrino)! என்ன அது? இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே, ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special…

கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில்…

இலக்கியக்கட்டுரைகள்

பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்

மு. இராமனாதன்   [2010ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சார்பாக மாதந்தோறும் வாசக-விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பன்னிரண்டு சிறுகதைகளை திரு. மு இராமனாதன் மதிப்பீடு செய்து, 2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்ததது- சதுரங்கம்,…

வானம் வசப்படும்.

மண் பயனுறவேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது மகா கவி பாரதியின் கவிதை வரிகள். எப்போது வானகம் மண்ணில் தென்படும்? யாருக்கு அது தென்படும்? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு சிந்திக்க முயன்றால்…

மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)

உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா... அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில்…

வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.

“ ஒரு தத்துவத்தைக் கலையா மாத்தறப்போ ஏற்படற நீர்த்த வடிவம் நாடகம்.” “ஒரு விஷயத்தக் கவிதை எழுதறபோது உண்டாற அமைதி, நடிக்கிறபோது வருமா?” - இரும்பு குதிரைகள். பாலகுமாரனின் இந்தக்கதையை எண்பதுகளின் இறுதியில் படிக்கும்போது…

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.

ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும்.  ”என்…

மைலாஞ்சி

பேராசிரியர் நட.சிவகுமார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதி தமிழ்வாசகர்களிடையே மிகுந்த கவனிப்பை பெற்ற மைலாஞ்சி(மருதோன்றி/மருதாணி) தற்போது நியூசெஞ்சுரி புத்தகநிறுவன மறுபதிப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலின் பதிப்புரையில் இருந்து சில குறிப்புகள்... தமிழ்சமுதாயத்தைதைசிந்திக்க வைக்கக் கூடிய ஆற்றல்…

இலக்கியங்களும் பழமொழிகளும்

நம்முன்னோர்கள் பன்னெடுங் காலமாகத் தங்களின் வாழ்க்கையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்தவற்றை எல்லாம் ஒருங்குகூட்டி அவற்றைப் பின்வரும் தலைமுறையினருக்குப் புகட்ட வேண்டி பழமொழிகளாக ஆக்கி வைத்தனர். இப்பழமொழிகள் அனைத்தும் வாழ்வியல் உண்மைகளாகத் திகழ்கின்றன. இவை…

எனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி

சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம் அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம் உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்பத்திரிகைகளுடனும்,…

பாரதியாரைத் தனியே விடுங்கள் !

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்பவை. பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக் கோபம்…

ஆத்மாவில் ஒளிரும் சுடர்

      பசுமையான, நெஞ்சை ஈர்க்கும் வண்ணம் கச்சிதமான அட்டைப் படத்தைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கண்ட போது, உடனேயே வாங்கிப் படித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுப் போனது. அதிலும் சுரா அவர்களின்…

வரலாற்றின் தடத்தில்

என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள்…

கடிதங்கள் அறிவிப்புகள்

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி அக்டோபர் 2, ஞாயிறு மாலை சரியாக 6.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி…

கதைகள்

Nandu 2 அரண்மனை அழைக்குது

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான…

முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்

தமிழில் எஸ். சங்கரநாராயணன் >>> ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் -   பிரியமான நண்பரே, கடந்த…

பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி   கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே…

பயனுள்ள பொருள்

மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர்…

நினைவு நதிக்கரையில் – 1

எனக்கு எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை. எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன். எதை செய்தாலும், அதில் அதிதமாய் போவது என்ற என்னுடைய இயல்புப்படி, ரஜினி…

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ். “அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா. “என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை”…

தங்க ஆஸ்பத்திரி

தண்ணி பிடிக்கிற இடத்தில, குளத்தில, காட்டுக்கு போற வழியில எல்லாம் இடத்திலும் கேட்டுப் பார்த்தாள் செல்லம்மாள். ராஜாத்தி மசியவே இல்லை. செல்லம்மாள் மட்டுமல்ல; மஞ்சுளா, அமுதா ரெண்டு பேரும் தனியா தனியா கேட்டுப் பார்த்தார்கள்..…

பிரதியைத் தொலைத்தவன்

---------------------------------------------- அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது நடந்தது சுமார் நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்......... “எனக்கு தற்கொலை…

கவிதைகள்

மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

காத்திருப்பு குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது .. நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு…

வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் - காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள்…

“அவர் தங்கமானவர்”

நாய்க் கொரு நண்பகலில் வாய்த் ததொரு தெங்கம்பழம் தா னுண்ணத் தெரியாமலும் தரணிக் குத் தராமலும் உருட்டியும் புரட்டியும் ஊர்சுற்றி ஊர்சுற்றி ஓய்ந்து போனதந்த நாய் தமக்கும் வாய்த்தது தங்கமானவர் எனும் பட்டம் தரங்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த மானிடம் விருந்தோம்பும் ! ஒவ்வோர் காலை உதயமும் ஒரு புது வருகைதான் ! உவப்பு, மன இழப்பு, தாழ்ச்சி…

வீடழகு

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் ஜொலிக்கும் பித்தளையின் தகதகப்போடு. மழைத் தூரிகை பூசணம் சூரியக்குடைத் தடுப்புதாண்டி வரவிட்டதில்லை…

பூனைகள்

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை செய்ததாய் நெட்டி முறிக்கின்றன. வீட்டுக்காரி அள்ளி வைக்கும் மீனில் திருப்தியடையும் அவை…

சிற்பம்

  ‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!   பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!   ‘ரெயின் ரெயின் கம்…

சுதேசிகள்

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு'ம் ,ப்யூமா'வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை 'ஆதலால் காதலை'ச்சொல்ல…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோன்றியது முதல் இங்கிருக்கிறேன் முடிவு வரை நானி ருப்பேன் முடிவில்லை எனது வசிப்புக்கு ! படைப்பின் போது இறைவன் தன்னிட…

முற்றும்

முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை  அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன்…

கள்ளன் போலீஸ்

நிலவும் நானும் கள்ளன் போலீஸ் விளையாடினோம் நான் போலீசாக நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும் நிலவு போலீசாக நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன் இப்படி மாறி மாறி இரவெல்லாம் விளையாட்டு சூரியன் தன்னையும் விளையாட்டில்…

த்வனி

இன்றைக்கு என்ன கிழமை வெள்ளியா, சனியா மாத்திரை விழுங்காமல் எங்கே தூக்கம் வருகிறது தேர் நிலைக்கு வந்துவிட்டது போல வேட்டுச் சத்தம் கேட்கிறது இத்தனை வயசாகியும் வாய் சாகமாட்டேன் என்கிறது புத்தனுக்கு ஞானம் தந்த…

பறவையின் இறகு

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83  -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன்…

தாய்மை!

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என்…