செப்டம்பர் 7, 1994 அன்று, ஹரோல்ட் கேம்பிங் அவர்களும் அவரது ஆதரவாளர்களும் சர்ச்சுக்கு போகும்போது உடுத்து சிறந்த ஞாயிற்றுக்கிழமை உடைகளுடன், விவிலியத்தை திறந்து வைத்துகொண்டு வான் நோக்கி பார்த்து இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள்.செம்டம்பர் 8 ஆம் தேதி, ரப்சர் Rapture என்று கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கும் எந்த வித நிகழ்வும் இல்லாமல் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல சூரியன் உதித்தது. ஹரோல்ட் காம்பிங் தனது கணக்கில் ஏதோ ஒரு தவறை கண்டுபிடித்தார். ரப்சர் ஏற்படும் நாளை […]
ஹெஸ், ஹௌஸ்ஷோபெர் சந்திப்பு நடந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. 1941ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஹெஸ் தமது பாதுகாவலர் கேப்டன் கர்லைன் பின்ஷ்(Karlheinz Pintsch)ஐ அழைத்துக்கொண்டு ஆக்ஸ்பூர்க்கிலிருந்த சிறிய விமான தளமொன்றிற்கு வந்தார். அங்கு மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் என்ற பெயரில் யுத்த விமான தயாரிப்பு நிறுவனமொன்று இருந்தது. நிறுவனத்தின் முதலாளி விலி மெஸ்ஸெர்ஸ்மிஷ்ட்டும் ஹெஸ்ஸ¤ம் முதல் உலகப்போரில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்ற வகையில் இருவரும் நெருங்கிய சகாக்கள். அவ்வப்போது நண்பரிடம் இரவல் கேட்டு அவர்களுடைய மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ “மனித இனத்தின் நன்மைக்காகக் கிளர்ச்சி செய்யவும், மதக் கோட்பாடுளை எதிர்க்கவும், வாலிபரைத் தம் வசப்படுத்தவும் மேதைகளுக்கு உரிமை அளிக்க வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Sanity of Art) “மாது ஒருத்தி மறுமுறைத் திருமணம் செய்து கொள்வதற்குக் காரணம் அவள் முதல் கணவனை முற்றிலும் வெறுத்ததே ! ஆடவன் மீண்டும் திருமணம் புரிவதற்குக் காரணம் முதல் மனைவி […]
“சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற வேண்டிய காயத்திரி, குளித்து முடித்து வருவதற்குள் சிற்றுண்டியைத் தயார் செய்துவிட்டு, கணவன் எழும் வரை ஒரு ‘குட்டி’ தூக்கம் போடலாம் என்று படுத்தார் லலிதா. மகள் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் ‘தாய்மை’ விழித்துக் கொண்டது. “எடுத்துகிட்டேன்”, ரயிலில் பயணிக்கும் போது தான் சிற்றுண்டியை உண்பாள் காயத்திரி. அதுவும் சென்ட்ரலில் இறங்கி, பறக்கும் ரயிலில் […]
எவரெஸ்ட் சிகரம் இவர் நடிப்பின் வியப்பில் வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டது. விருதுகளின் முகங்கள் அசடு வழிந்தன. இவருக்கு விருது தர என்ன இருக்கிறது இங்கு? ஆங்கிலப்படம் தழுவியபோதும் இந்திப்படமும் (“பார்”) வந்து விட்ட போதும் அமிதாப் அங்கு சிறப்பாக அசத்திய போதும் எல்லாருமே அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டார் விக்ரம். தலைப்பின் சலசலப்பு சந்திக்கு வரும் முன் பந்தி விரித்துவிட்டார்கள் தெய்வத்திருமகள் என்று! தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா? நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது. மழலைக்குள் புகுந்து நம் கண்ணுக்குள் மழைபெய்ய வைத்து […]
பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட […]
சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டால், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பெட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் வயதில் வீட்டிலிருந்து ஓடி நிலக்கோட்டை பார்க் கட்டிட தாழ்வாரத்தில் […]
இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என் ஒவ்வொரு செயலும் . விளைகின்ற யாவும் மற்றவர்களை போல என்னை சேராமல் இருக்க கடவுது. இவை அனைத்தும் என்றேனும் ஒன்றை உங்களிடம் கூறியிருப்பதை ஏற்றுகொண்டிருக்கக் கூடும் மறுத்திருக்கவும் செயலாம் அதை விட மிகவும் எளிதானது […]
இரட்டைப்புள்ளிக் கோலங்களாய் ஆரம்பிக்கிறது., ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை. குழந்தைப் புள்ளிகளைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் ஊரளவு. பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய் புள்ளிகள் விரிகின்றன. எள்ளுப் பேரன்களின் வீரியக் குறைச்சலால்., எள் தெளித்தபடி வர.. சோற்றைத் தேடும் காக்கைகளாகின்றனர் முன்னோர்கள். அள்ளிச்சிதறிய பருக்கைகளாய் புள்ளிகள் குறைந்து வர காயதுவங்குகிறது தரை. குழந்தைப் புள்ளிகள் குறுகி குழந்தைகளற்ற இரட்டைப்புள்ளிகளாய் முடிகிறது கடைசி அப்பா அம்மாவின் வாழ்க்கை. வெறுமையுடன் தொடர்பற்று இருக்கும் அவர்கள் நெளிக்கோலங்களாய் சுற்றத் தொடங்குகிறார்கள் உறவுப்புள்ளிகளை. ஒரு […]
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல் தேர்வாகியுள்ளது. ÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி: ÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது. ÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், […]