விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 42 of 42 in the series 22 மே 2011

    1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37

This entry is part 41 of 42 in the series 22 மே 2011

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ)  – விதிகள்   1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what?’ […]

இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்

This entry is part 40 of 42 in the series 22 மே 2011

தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – வேறு யாரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று வீரவுரை பேசி மக்கள் மன்றத்திற்கு முன்னால் நீதி மன்றங்கள் தலை பணிய வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் எழுதப் பட்டிருக்கும். அதற்கு வழியில்லாத படிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் இது போதாது. […]

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

This entry is part 39 of 42 in the series 22 மே 2011

கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன.     கடந்த 3.4.2011 […]

தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!

This entry is part 38 of 42 in the series 22 மே 2011

சிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர் கவிதைகள் எழுதாதபோதும் கவிதையாகவே திகழ்வதுபோல் ஒரு நெகிழ்வுண்டாக்குவார்கள். கவிஞர் அய்யப்ப மாதவன் இரண்டாம் வகை. உலகம் அன்புமயமாக, பசி, பட்டினி, போர், பச்சைத்துரோகம் என்று எதிர்மறைகள் எதுவுமில்லாமல் எல்லோருமே – அணில், சிட்டுக்குருவி, தும்பி உட்பட – வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று மனதார […]

இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,

This entry is part 37 of 42 in the series 22 மே 2011

ராஜீவ் விளம்பரங்கள் நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதே போல அனைத்து துறைகளும் ராஜீவ் காந்தி நினைவு நாளை நினைவு படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. இது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்காக செலவழித்த தொகை மட்டுமே சுமார் 65 கோடி ரூபாய் என்று […]

இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’

This entry is part 36 of 42 in the series 22 மே 2011

முன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில். ”இதற்கு தமிழின் தனித்துவம் மிக்க படைப்பாளிகளான மா.அரங்கநாதன், அசோகமித்திரன், க.நா.சு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது” என்று தொகுப்பின் […]

கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …

This entry is part 35 of 42 in the series 22 மே 2011

’வெளி’ ரங்கராஜன்   இன்றைய பின் – நவீன காலகட்டத்தில் புனைவு எழுத்துக்களுக்கும் அ-புனைவு எழுத்துக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளிகள் மறைந்து அ-புனைவு எழுத்துக்களின் இலக்கியப் பரிமாணம் அதிகமாக உணரப்படும் நிலை உள்ளது. வாழ்வுக்கும், புனைவுக்கும் இடைப்பட்ட கோடுகள் விலக்கப்பட்டுக்கொண்டே வரும்போது புனைவு குறித்த பிரமைகள் நீங்கி இரண்டும் இணையாகப் பயணிக்கும் நிலைகள் உருவாவதோடு ஒரு செறிவான படைப்பு முயற்சி வடிவ நிர்ணயங்களைக் கடந்து வாழ்வை அண்மைப்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் கவிஞராக அறியப்பட்டுள்ள வைதீஸ்வரனின் இக்கட்டுரைகள் கவிதைக்கும், […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1

This entry is part 34 of 42 in the series 22 மே 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே.”   ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)   கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் பணத் திமிரா ? ஏழ்மை நீக்கப்படாமல் பார்த்துக் கொண்டிருப்பதுதான் நிஜக் குற்றமா ?   […]

ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து

This entry is part 33 of 42 in the series 22 மே 2011

முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன […]