இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ...! -செண்பக ஜெகதீசன்...
”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே…
குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்... ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின... நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன... நகரத்தின் ஒற்றை மரங்களில்…
வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சாரம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் நம்பிக்கிடந்தோம். மின்சாரம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிடந்தோம். தண்ணீரை குடம் குடமாய் கொட்டி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது கண்கள் பல்லாண்டுகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கி வந்தவை. அவரது செவிகள் வாழ்க்கையின்…
சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன. நான் நிரம்பிய நாட்கள் வெறும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மரணம் வந்திடும் பொழுது விடிவது போல் ! புன்முறுவ லுடன் நீ எழுந்த ருள்வாய் உனது துயராய்க் கருதி !…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீட்டெழுச்சி நாளில் உனது மேனி உனக் கெதிராய்ச் சாட்சி சொல்லும் ! "களவாடி னேன்", என்று உனது கரங்கள் கூறும்…
சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே வந்த மீதமுள்ள நீர் சிறு பாசிமணிகள் போல் அதன் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தது…
அந்த நேற்றைய பவளமல்லிப்பூக்கள் வீட்டு வாசல் தரையில் சிவப்புக்கால்கள் கொண்டு நட்சத்திரக்கூட்டங்களாய் படுத்துக்கிடக்கின்றன. எந்த குருவாயூரப்பனையாவது நேற்று பூராவும் அப்பிக்கிடந்த பின் களைத்துக் கால் நீட்டிக்கிடக்கின்றன. வீட்டுக்குள்ளிருந்து அந்த பவளமல்லி மரம் தன் கிளையை…
புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை…
அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com
1)மூன்றுதலைமுறைவயசிருக்கும் இதன் பிரம்மாண்டமான உருவத்தை யாரும் கவனித்ததாய் இல்லை. எவருக்கும் தெரிந்ததுவுமில்லை இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும் வான் நோக்கி நிமிர்ந்தும் மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும் வேப்பமரம்தான் என்றாலும் முன்காமிகளும் சொன்னதில்லை இத்தனை ஆண்டுகளாய் இது…
=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து - குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை…
நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து…
ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய…
கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது…
_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல…
என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை…